மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களில் கரூர் டீம் வசூல் வேட்டையில் மிரட்டி ஈடுபடுவதாக பார் உரிமையாளர்கள் சிலர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
கரூர்: தற்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பு, தமிழகம் முழுவதும் ‘கரூர் டீம்’ என்ற பேச்சு, டாஸ்மாக் பார்களில் ஒலித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் கசிந்தன.
இதன்படி, டாஸ்மாக் பார்களில் அதிரடி வசூல், பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் உள்ளிட்ட விவகாரங்களில் கரூர் டீமின் தலையீடு தாராளமாக இருந்ததாகவும் செய்திகள் கிடைத்தன. அந்த வகையில், சமீபத்தில் கோவை காந்திபுரம் பகுதியில் பார் நடத்தும் கருப்புசாமி என்பவரை கரூர் டீம் கமிஷன் கேட்டு மிரட்டியதாகத் தெரிகிறது.
இது குறித்து தனியார் நாளிதழுக்கு கோவை டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சிலர் கூறியதாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், “கோவையில் உள்ள டாஸ்மாக் பார்களை ஈஸ்வரமூர்த்தியின் கரூர் டீம், தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஒவ்வொரு பாரிலும் 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வரை மாதாமாதம் கட்சிக்காக என்று சொல்லி வசூலிக்கின்றனர்.
இதனைச் சமாளிக்க முடியாமல் பார் உரிமையாளர்கள் பயந்து, ஒதுங்கி நிற்கின்றனர். கடந்த ஓராண்டாக (செந்தில் பாலாஜி சிறையில் இருந்த காலம்) இந்தக் கெடுபிடிகள் இல்லாமல் நிம்மதியாக இருந்தோம். இப்போது திடீரென மீண்டும் கட்சிப் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். இதனைக் கொடுக்க மறுத்தால் அதிகாரிகள் உதவியுடன் பார்களை பூட்டி சீல் வைத்து, வேறொருவருக்கு அதை ஒதுக்கீடு செய்கின்றனர்.
இதையும் படிங்க: சிறுமி கர்ப்பமடைந்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு… இளைஞருக்கு அறிவித்த தண்டனை!!
அரசுக்குச் செலுத்த வேண்டிய டெண்டர் தொகையை செலுத்தாமலும் ஏராளமான பார்கள் அனுமதி இன்றி கரூர் பார்ட்டிகளின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது. அந்த பார்களிலும் கெடுபிடி வசூல் செய்கின்றனர். ஆளும் கட்சியின் ஆதரவு கரூர் டீமிற்கு இருப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை” எனக் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.