பிள்ளைமார் சமுதாயத்தை அவமதித்த திமுக எம்பி ஆ.ராசா… CM ஸ்டாலினுக்கு சோழியர் வெள்ளாளர் சங்கம் விடுத்த எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
13 பிப்ரவரி 2024, 9:08 காலை
Quick Share

ஆ ராசாவை கண்டிக்கவில்லை என்றால் தேர்தலில் அதன் பின்விளைவை முதல்வர் காண்பார் என்று சோழியர் வெள்ளாளர் சங்க மாநிலத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சோழியர் வெள்ளாளர் சங்க மாநில தலைவர் மருத்துவர் செந்தில்குமார் மற்றும் பல்வேறு மாவட்ட தலைவர்கள் ஒருங்கிணைந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- தமிழக முதல்வருக்கு ஒரு செய்தியை கொண்டு செல்ல இந்த செய்தியாளர் சந்திப்பு அழைக்கப்பட்டிருக்கிறது. நாமக்கல் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஒட்டுமொத்த பிள்ளைமார் சமுதாயத்தையே ஒருமைபடுத்தி பேசி உள்ளார். வ.உ.சி.சிதம்பரம் பிள்ளை அவர்களை தலைவராக்கி விட்டார்கள் என்பதை சிலர் தலைவராகி விட்டானுங்க என கூறி உள்ளார். இது பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சுமார் இரண்டரை கோடி பிள்ளைமார் சமுதாயத்தினர் உள்ளனர். வ.உ.சி அவர்களை ஒரு தெய்வமாக வணங்குகிறோம். அதுபோன்ற ஒரு நிலைமையில் இருக்கும்போது, அவர் வந்து தன்னுடைய சொந்த மகனுக்காக ஒரு கடிதத்தை எழுதி அதை வந்து பெரியாரிடம் கொண்டு போய் கெஞ்சி கேட்டார் என்ற வார்த்தை எல்லாம் உபயோகப்படுத்தி இருக்கிறார்.

இதுபோல் மேடைப் பேச்சு பேசும் போது, இனிவரும் காலகட்டத்தில் இது மாதிரியான ஒரு ஒருமைப்படுத்தி, காயப்படுத்துகிறது மாதிரி பேச்சு, எந்த ஒரு சமுதாயத்தையும் குறிப்பிட்டு சொல்லாமல் இருந்தால், இது மாதிரியான பிரச்சனைகள் எல்லாம் எதுவும் வராமல் இருக்கும்.

வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தான் இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சமுதாயம் சார்ந்த பிரச்சினை கையில் எடுத்து பெரிதாக வரக்கூடாது என்பதற்காகத்தான் முதல்வரிடம் இந்த செய்தியாளர் சந்திப்பு மூலமாக கேட்டுக் கொள்கிறோம், எனக் கூறினார்.

வருத்தம் தெரிவிக்காவிட்டால் பாராளுமன்ற தேர்தலில் எதிர்ப்பை தெரிவிப்பீர்களா என்ற கேள்விக்கு, “வருத்தம் தெரிவிப்பார்கள் என நம்புகிறோம். இல்லையென்றால் அதை பற்றி பின்னர் பேசலாம். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் ஒட்டு மொத்த சமுதாயமும் தலைவர்களை கலந்து பேசி நல்ல முடிவை எடுப்போம்.

தலைமை கண்டிக்க வேண்டும். பிள்ளைமார் சமுதாயமும் அனைத்து வெள்ளாளர் சமுதாயமும் கண்டிக்கிறோம். அடுத்தது உச்சகட்ட நடவடிக்கை எடுப்போம். எங்கள் சமுதாயத்துக்கு ஆதரவாக இருந்தால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். எம்பி தொகுதியில் 25 முதல் 30 இடங்களில் வெற்றியை நிர்மாணிக்க இடத்தில் நாங்கள் இருக்கிறோம். எங்களை அவமானப்படுத்தினால் நாங்கள் ஆதரிப்போம் என்பது நடக்காது. அதற்கு உண்டான தீர்வை தமிழக அரசு கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த தேர்தலில் அதன் பிரதிபலிப்பு உண்டாகும்.

பாராளுமன்றத் தேர்தல்லுக்குள் ஆ.ராசா வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், மன்னிப்பு கேட்கவில்லை என்றால், மாநில தலைவரின் அனுமதியோடு பிரச்சாரம் பண்ணுகிற எல்லா மாவட்டங்களிலும் சென்று கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவோம். டெல்டா மாவட்டங்களில் பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்தவர் அதிகமாக உள்ளனர். எல்லோரும் சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்தோம். ஆர்ப்பாட்டம் நடக்கிறது, கண்டனம் தெரிவிப்பது இருக்கும் போது இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லாததால் செய்தியாளர் சந்திப்பை நடத்தி வருகிறோம்.

சமுதாயத்தினர் தனித்தனியாக உள்ளனர் என்பதை விட நேரம் வரும்போது ஒன்று கூடுவார்கள். எந்த அரசு பிள்ளைமார் சமுதாயத்திற்கு ஆதரவாக உள்ளதோ அதன் பயன் அவர்களுக்கு தெரியும், என கூறினார். பேட்டியின் போது திருச்சி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 355

    0

    0