சாலையும் வரல, பாலமும் வரல், நிதியும் வரல : முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
26 December 2024, 6:40 pm

கோவை மேட்டுப்பாளையம் சாலை அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நடைபெற்று வரும் மேம்பால பணிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பார்வையிட்டார்.

அவருடன் கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் அர்ஜுனன் உட்பட பலரும் மேம்பால பணிகள் குறித்து பார்வையிட்டனர்.

ஒரு மேம்பால பணிகள் எவ்வாறு செய்யப்படுகிறது என்னென்ன பணிகளை மேற்கொள்கிறார்கள் என்பது குறித்து நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

SP Velumani Inspect Bridge Works in Coimbatore

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில் :- மக்களுடைய கோரிக்கையான இந்த பகுதியில் டிராபிக் ஏற்படக் கூடாது என்று தான் இந்த மேம்பாலம் கட்டப்படுகிறது. ஆனால் இந்த பகுதியில் ரவுண்டானா மட்டும் அமைக்கிறார்கள்.

ஆனால் மக்களுடைய கோரிக்கை என்னவென்றால் இந்த பாலம் முருகன் மில்லில் தொடங்கி சி.டி.சி டெப்போ அருகில் முடிகிறது. ஆனால் அதனை சற்று நீட்டித்து சங்கனூர் சாலையை கடக்கும் வகையில் அமைக்க வேண்டும் என்று அதற்கு தற்போது திட்ட மதிப்பீடு 22 கோடி தயாரித்து உள்ளதாக தெரிகிறது.

எந்த நிலையில் கடந்த காலத்தில் திட்டமிட்டபடி அன்னபூர்ண பகுதியில் இருந்து சங்கனூர் சாலையை கடந்து பாலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் அவ்வாறு இருந்தால் இப்பகுதி மக்கள் பயன்பெறுவார்கள்.

அவர்களின் இந்த 50 ஆண்டுகால பிரச்சனையும் தீரும், மேலும் இது ஊட்டி, மேட்டுப்பாளையம், மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாகும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது.

எனவே இந்த கோரிக்கையை பகுதி மக்களும் முன்வைத்து உள்ளனர். அதைத் தான் நாங்களும் தற்போது அரசுக்கும் பொதுப் பணித் துறைக்கும் முன் வைக்கின்றோம்.

கோவை மாவட்டத்திற்கு பல்வேறு பாலங்களை கொடுத்து, மேம்பால நாயகனாக திகழக் கூடிய கேட்ட பாலங்கள் மட்டுமல்லாது 50 ஆண்டுகால வளர்ச்சி குறிப்பாக பாலங்கள், சாலைகள் கூட்டு குடிநீர் திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம், விமான நிலைய விரிவாக்கம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என பல்வேறு திட்டங்களை வாரி வழங்கிய முன்னாள் முதல்வரும் தற்போது எதிர்க்கட்சித் தலைவருமான வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எப்படி கொடுத்தார்.

அப்படி பாலங்களையும் இன்றைக்கு இந்த மக்கள் பாராட்டிக் கொண்டு இருக்கின்றனர். அதேபோல இந்த பாலங்களையும் இந்த அரசு உடனடியாக நீட்டிப்பு செய்ய வேண்டும். அதற்கு இன்னும் பத்து அல்லது 12 கோடி ரூபாய் தான் வரும் அதை போட்டாலே நமக்கு மக்கள் எதிர்பார்க்கும் அந்த கோரிக்கையை நிறைவேற்றலாம்.

இதையும் படியுங்க: சுடுகாட்டுக்கே கூட்டிச் சென்ற சுடுதண்ணீர்.. இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

எனவே கண்டிப்பாக இந்த பாலத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட மக்களின் சார்பாக நாங்கள் அரசுக்கும் நெடுஞ்சாலைத் துறைக்கும் இந்த கோரிக்கையை முன் வைக்கின்றோம்.

பகுதி மக்கள் அமைச்சர்கள் வரும் போது இந்த கோரிக்கையை முன் வைத்தார்கள் என்று சொல்கிறீர்கள் ஆனால் அந்த கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டு செய்யவில்லை.

கண்டிப்பாக இதை நிறுத்தி விட்டு மக்களின் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் பாலம் கட்டுவதை அமைக்க வேண்டும், டிராபிக் என்பது ஏற்படக் கூடாது. இவர்கள் கட்டும் இந்த பாலத்தால் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படும்.

எடப்பாடியார் முதலமைச்சராக இருக்கும் போது எத்தனை திட்டங்களை கொடுத்தார்கள் என்று சொல்லிவிட்டேன். மூன்று ஆண்டுகளாக எந்த திட்டங்களையும் இந்த அரசு செய்யவில்லை. இதை பார்த்தாவது சரியான முறையில் செய்ய வேண்டும்.

நாங்கள் 50 ஆண்டு காலத்தில் இல்லாத வளர்ச்சியை கொடுத்து தான் அது உங்களுக்கே தெரியும். இன்றைக்கு பார்த்தோம் என்றால் சாலை பணிகள் எல்லாம் செய்யவில்லை நான் கூட சட்டமன்றத்தில் இது பற்றி கேள்வி கேட்டேன். அமைச்சர் பணம் ஒதுக்கி உள்ளோம் என்று கூறினார். ஆனால் இந்த பகுதிக்கு ரோடுகள் வந்து சேரவில்லை, நிதி வந்து சேரவில்லை, இதுவரைக்கும் எதுவுமே செய்யவில்லை, மிகவும் சிரமமாக உள்ளது.

SP Velumani Criticized DMK

பல ரோடுகள் டேமேஜ் ஆக உள்ளது. அந்த ரோடுகளையெல்லாம் உடனடியாக போட வேண்டும். குறிப்பாக எடப்பாடியார் முதலமைச்சர் ஆக இருக்கும் போது நான் துறை அமைச்சராக இருந்த போது கிட்டத் தட்ட 500 ரோடுகளுக்கு நிதி ஒதுக்கி இருந்தோம்.

அதை ரத்து செய்தார்கள். அந்த ரோடுகளை இன்றைக்கு போட்டாலாவது பரவாயில்லை. கண்டிப்பாக இந்த பணிகளை வேகமாக செய்ய வேண்டும் என்றார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 19

    0

    0

    Leave a Reply