மணிப்பூர் கிளர்ச்சி போல நடந்ததோ…? நாடாளுமன்ற சம்பவம் ; சந்தேகத்தை கிளப்பும் சபாநாயகர் அப்பாவு!!

Author: Babu Lakshmanan
14 December 2023, 10:37 am

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டை விழாவை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது :- பாராளுமன்றத்தில் வீசியது இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. ஏற்கனவே பாராளுமன்றத்தில் பெண்களை ஒருமையில் பேசுகிறார்கள். பாஜக எம்பி அவை குறிப்பில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பேசுகிறார்கள். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர், ஏற்கனவே குற்றவளி, இவர் பாராளுமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார். இவையெல்லாம் நாகரீகமற்றது அல்ல, நாடாளுமன்றம் எந்த அளவுக்கு செயல்படுவது என்பது தெரிகிறது.

தந்தை பெரியார் எல்லோரும் மனித இனம் ஒன்று தான் என நாடாளுமன்றத்தில் அப்துல் காதர் பேசும்போது, அப்போது அதை குறிப்பில் இருந்து நீக்குகிறார்கள். அவர் என்ன பேசுகிறார்கள் என்பதை முழுமையாக பேச வைத்து, பின்பு தவறு இருந்தால் அதை குறிப்பிடலாம். நாடாளுமன்றத்தில் வீசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு எந்த பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு சொல்லவில்லை. இந்த அரசு பதவி ஏற்றதில் இருந்து எங்கெல்லாம் பலவீனமாக இருப்பது உங்களுக்கு தெரியும். சைனாவிற்கும் இந்தியாவிற்கும் 3500 கிலோமீட்டர் அதிகமாக உள்ளது. அந்த எல்லையில் ஒரு பிரச்சனை வந்தது. மகாபலிபுரத்தில் சீனா அதிபரும், பாரத பிரதமரும் சந்திக்கிறார்கள். என்ன பேசினார்கள் என யாருக்கும் தெரியாது, உடனடியாக எல்லையில் பிரச்சனை ஆகிறது.

20 ராணுவ வீரர்களை வெட்டிக் கொள்கிறார்கள். இதுவரை சைனாவை கண்டிக்க முடியவில்லை. சைனா, பாகிஸ்தான் நமக்கு எதிராக உள்ளது, நமக்குள்ள நேச நாடுகளும் நம்மிடம் இல்லை. நம்மை சுற்றியுள்ள நாடுகள் நமக்கு விரோதமாக தான் உள்ளது. சுற்றி இருக்கிற அண்டை நாடுகளில் சுமூக உறவும் இல்லை. பாதுகாப்பும் குறைபாடு உள்ளது.

நாடாளுமன்றத்திலும் இப்படிப்பட்ட தவறு நடந்திருக்கிறது. யார் அந்த தவறை செய்திருந்தாலும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அவர்களுடைய பலவீனத்தை தான் காட்டுகிறது. ஏற்கனவே பாராளுமன்றத்தில் பாஜகவினர் உறுப்பினர்கள் சில தவறுகளை செய்துள்ளனர். அங்கே இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. மணிப்பூர் மாதிரி அந்த கிளர்ச்சிக்காரர்களை வைத்து நடந்த மாதிரி நடந்துள்ளதா என்று தெரியவில்லை, என தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 350

    0

    0