Categories: தமிழகம்

நாங்குநேரிக்கு அரசு பேருந்துகளை இயக்கக்கூடாது என சபாநாயகர் அப்பாவு கட்டளை? ஓட்டுநரின் வீடியோவால் பரபரப்பு!

நெல்லை மாவட்டம் நெல்லை நாகர்கோவில் வழித்தடத்தில் உள்ள பல்வேறு ஊர்களுக்குள் அரசு பேருந்துகள் செல்லாமல் புறவழிச் சாலை வழியாக செல்கின்றன என பல ஆண்டுகளாக பகுதியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (ஜூன்5) இரவு நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர் நாங்குநேரி செல்லும் பயணிகளை ஏற்ற மறுத்துள்ளார்.

அப்பொழுது அரசு பேருந்து ஓட்டுனருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு பயணி நாங்குநேரிக்கு போகாதது குறித்து அரசு பேருந்து ஓட்டுனரிடம் கேட்கும் போது சபாநாயகர் அப்பாவு மற்றும் வள்ளியூர் வணிகர் சங்கம் இணைந்து முடிவெடுத்து நாங்குநேரிக்கு அரசு பேருந்து செல்ல வேண்டாம் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாங்குநேரி ஒரு சட்டமன்றத் தொகுதி மற்றும் தாலுகாவின் தலைநகராக உள்ளது. இங்கு தாலுகா அலுவலகம் மாவட்ட நீதிமன்றம் காவல் நிலையம் மருத்துவமனை என பல்வேறு சேவைகளுக்கு நாங்குநேரி வட்டாரம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மற்றும் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் அரசு பேருந்துகள் வழியில் உள்ள முக்கிய ஊரான நாங்குநேரிக்குள் செல்லாமல் பல நேரங்களில் புறவழிச் சலையில் பயணிகளை இறக்கி விட்டு செல்லும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது.

அனைத்து பேருந்துகளும் நாங்குநேரி ஊருக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி வர வேண்டும் என அரசு உத்தரவு இருந்தும் அதனை செயல்படுத்தாததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உயர் நீதிமன்றத்தில் பெற்ற சிறப்பு உத்தரவு இருந்தும் அதனை மதிக்காத அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் ஊழியர்களும் சட்ட விரோதமாக அரசு பேருந்துகளை புறவழிச் சாலையில் இயக்கி வருகின்றனர்.

இதனை கட்டுப்படுத்த வேண்டிய சம்பந்தப்பட்ட காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளும் எம்எல்ஏ எம்பிக்களும் வேடிக்கை பார்க்கின்றனர் என கூறும் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் சபாநாயகர் அப்பாவுவை தொடர்புபடுத்தி நெல்லையில் பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அரசு பேருந்து செல்ல வேண்டாம் என கூறியதாக வெளியான வீடியோ தகவலால் நாங்குநேரி தொகுதி வாழ் மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர்.

கடந்த வாரம் நாங்குநேரியில் அரசு பேருந்தில் காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது தமிழகம் முழுவதும் வரிந்து கட்டிக் கொண்டு நடவடிக்கையில் இறங்கிய போலீசார் பின் உயர் அதிகாரிகளின் தலையீட்டால் போக்குவரத்து துறையினரோடு சமாதானமாகினர்.

இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழகத்தினரின் சட்டவிரோத செயல்களை கண்டு கொள்ளாமல் இருப்பது குறிப்பிடத் தக்கது.

அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் முறையாக முறையாக இயங்குவதை கண்காணிக்க வேண்டிய காவல்துறையினர் சட்டத்தை பின்பற்றி நடைமுறைப்படுத்தாமல்கண்மூடித்தனமாக இருப்பதால் அரசு பேருந்துகள் ஊழியர்களின் இஷ்டத்திற்கு இயங்குகின்றன.

மேலும் கடந்த மாதம் 19ஆம் தேதி இதே பேருந்தின் நடத்துனர் வள்ளியூர் போக மாட்டேன் என கூறி தகராறில் ஈடுபட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

TVK Vs DMK தான்.. மாண்புமிகு ஸ்டாலின், மோடி ஜி அவர்களே.. விஜய் அட்டாக் பேச்சு!

இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி, ஒன்று தவெக; மற்றொன்று திமுக என விஜய் கூறியுள்ளார். சென்னை:…

25 minutes ago

உதயநிதிக்கு மட்டும் No தடா.. அடித்துச் சொல்லும் இபிஎஸ்!

முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…

1 hour ago

முரட்டு கம்பேக்கா அமைந்ததா ‘வீர தீர சூரன்’..சூர ஆட்டம் காட்டினாரா விக்ரம்..படத்தின் விமர்சனம்.!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…

2 hours ago

மோசடியில் செல்வப்பெருந்தகை அண்ணன் மகன்? திமுகவுக்கு தெரியாமலா? அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…

2 hours ago

நழுவிய செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் ED.. பாஜக செக்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

3 hours ago

யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!

தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…

3 hours ago

This website uses cookies.