ஆளுநர் உரையுடன் 19ம் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ; எந்த ஒளிவு மறைவும் அரசிடம் இல்லை ; சபாநாயகர் அப்பாவு!

Author: Babu Lakshmanan
1 February 2024, 9:30 pm

சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் தேதிகள் குறித்து சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு மு. அப்பாவு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது ;- தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 174 ஒன்றின் கீழ் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளது.

2024 – 25 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்படும். 20ம் தேதி 2024 – 25 ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கைகள் மற்றும் 21ம் தேதி ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் அளிக்கப்படும்.

12தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரை. நீதிமன்றம் சட்டப்பேரவை தலைவரையும் கட்டுப்படுத்த சட்டப்பேரவையில் அமர வைப்பது சட்டப்பேரவை தலைவருக்கு தான் முழு உரிமை உண்டு. இந்த ஆட்சியில் சட்டப்பேரவை நேரலை தொடர்ந்து காண்பிக்க மீண்டும் பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். அனைத்தையும் நவீன தொழில்நுட்பத்தில் அனைத்தையும் வெளிப்படை தன்மையாக காட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்து வருகிறோம். எந்த ஒளிவு மறைவும் அரசிடமும் இல்லை, எனக் கூறினார்

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!