இதுக்கு மேல அவதூறா பேசுனா நடப்பதே வேற.. : திருமாவளவனுக்கு இந்து மக்கள் கட்சி பிரமுகர் பகீரங்க எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
29 December 2022, 9:56 pm

அர்ஜூன் சம்பத் குறித்து அவதூறாக பேசுவதையும், இந்துக்களை பற்றி அவதூறாக பேசுவதை திருமாவளவன் நிறுத்தி கொள்ள வேண்டும் என இந்து மக்கள் கட்சி பிரமுகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூரில் இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் கரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், கரூர் அரசி லாட்ஜில் மாவட்ட தலைவர் காலணி மணி தலைமையில் நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ், கரூர் நகர தலைவர் விஜயேந்திரன், கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் இராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் கங்காதரன், மாவட்ட இளைஞரணி பொருளாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநில செயலாளர் நெல்லை முருகானந்தம், மாநில துணை தலைவர் கடலூர் கடல் அலை கதிர்வேல் ஆகியோர் மற்றும் நெல்லை மாநகர தலைவர் நீலகண்டன் ஆகியோர் சிறப்புரையாற்ற வருகை தந்தனர்.

இந்நிகழ்ச்சியினை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் நெல்லை முருகானந்தம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தொடர்ந்து எங்களது அர்ஜூன் சம்பத் ஐயாவை அவதூறாக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டுமென்றும், இல்லையென்றால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சட்டபூர்வமமான நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்தார்.

மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்களை சட்டவிரோதமாக பட்டா போட்டு விற்பனை செய்து வரும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான 40 இடங்களையும் தமிழகம், பாண்டிசேரி ஆகிய இடங்களை கைப்பற்றும், இந்து மக்கள் கட்சி அதற்காக பாடு படும் என்றும் கேட்டுக் கொண்டார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…