10ம் வகுப்பில் 60% மதிப்பெண் எடுத்த சிறப்பு குழந்தை.. புறக்கணிக்கும் பள்ளிகள்.. TCயுடன் பள்ளிகளுக்கு அலையும் தாய்!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2024, 5:05 pm

10ம் வகுப்பில் 60% மதிப்பெண் எடுத்த சிறப்பு குழந்தை.. புறக்கணிக்கும் பள்ளிகள்.. TCயுடன் பள்ளிகளுக்கு அலையும் தாய்!

கோவை செட்டிவீதியை சேர்ந்த வரலட்சுமி என்பவரின் சிறப்பு குழந்தை கோவை காந்திபார்க, சலிவன் வீதியில் உள்ள மாரண்ண கவுண்டர் உயர்நிலை பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சிறப்பாக படித்து கடந்த 10 ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வில் ஆசிரியர்களின் உதவியுடன் தேர்வெழுதிய அந்த மாணவன் 300 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளான்.

அதை தொடர்ந்து மேல்நிலை கல்வியான பதினொன்றாம் வகுப்பில் சேர்த்த கோவையில் உள்ள அரசு பள்ளிகள் மறுப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றார்.

சில அரசு பள்ளிகளில் உங்கள் மகனை தனியார் பள்ளியில் படிக்க வையுங்கள் என்று மனசாட்சி இல்லாமல் பேசுவதாகவும், தனியார் பள்ளிகளில் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை செலவாகும் என்கிறார்கள் எங்களுக்கு அந்த அளவிற்க்கு வசதி வாய்ப்புகள் இல்லை என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.

மேலும் படிக்க: நள்ளிரவில் விடாமல் குறைத்த நாய்கள்.. இரவோடு இரவாக தனியாளாக வந்த அந்த உருவம்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

மேலும் எந்த பள்ளியிலும் எனது மகனை சேர்காததால் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்ததாகவும், அனைத்து திறமைகளும் கொண்ட எனது மகனுக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்க மாவட்ட ஆட்சியர் உதவிபுரிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசை பொருத்தவரை இல்லம் தேடி கல்வி, மற்றும் பல்வேறு பெயர்களில் விளம்பரங்களை செய்துவரும் நிலையில் தனது சிறப்பு குழந்தையின் கல்வி அறிவிற்க்காக போராடி வரும் ஒரு தாயின் அழுகுரல் கேட்குமா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

  • GBU movie audience reaction எரிச்சல் ஆகுது, படம் முழுவதும் Instagram Reelsதான்- GBU பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்…