உலக மகளிர் தின கொண்டாட்டம்: கோவையில் மகளிருக்கு மாவட்ட அளவிலான போட்டி!!

Author: Rajesh
5 March 2022, 3:24 pm

மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடபட உள்ளது. அதனையொட்டி அரசு சார்பில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் மகளிர் குழுக்களுக்கு கோலப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவிய போட்டிகள் மூன்று தினங்களுக்கு முன் நடைபெற்றது.

அதில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கான போட்டிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 12 ஒன்றியங்களில் முதலிடத்தை பெற்றவர்கள் கோலப்போட்டியில் பங்கேற்றனர்.

மேலும் ஓவிய போட்டி, பேச்சுபோட்டி ஆகியவைகளும் நடைபெற்றன. உணவு மற்றும் ஊட்டச்சத்து என்ற தலைப்பில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த கோலப்போட்டிகளில் பங்கேற்றவர்களில் பலர் காய்கறிகளை கொண்டும் தானியங்களை கொண்டும் கோலமிட்டனர்.

இதில் முதல் இடத்தை பெறுபவர்கள் நாளை சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்பர்.

  • Laika Productions exits Jason Sanjay film விஜய் அரசியலால் ஜேசன் சஞ்சய் படப்பிடிப்பில் சிக்கல்..லைக்கா எடுக்கப்போகும் அதிரடி முடிவு.!