சென்னை: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த மசோதாவை 142 நாட்களுக்கு பிறகு ஆளுநர் ஆர்.என். ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாக ஆளுநர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், மசோதா திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி சட்டமன்ற அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது.
அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக கலந்துகொள்ளவில்லை. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நேரலை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் 11 ஆண்டுகளில் 5வது முறையாக இன்று சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. 2017ல் ஜல்லிக்கட்டு தடையை நீக்கவும், 2018ல் மேகதாது அணை விவகாரத்துக்காகவும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
This website uses cookies.