அதிமுக மாநாட்டிற்காக வந்த சிறப்பு பிரத்யேக ரயில்… சென்னை – மதுரைக்கு வந்த 1,300 பேர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2023, 1:42 pm

மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக எழுச்சி மாநாட்டிற்க்கான சிறப்பு ரயில் மதுரை வருகை

நேற்று இரவு சென்னை எழும்பூரில் இருந்து 1,300 அதிமுகவினருடன் புறப்பட்ட சிறப்பு ரயில் மதுரை கூடல் நகர் ரயில் நிலையம் வந்தடைந்தது. நேற்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் இன்று காலை வந்தடைந்தது.

சென்னை எழும்பூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதிமுக மாநாட்டிற்க்காக 13 குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

இந்த சிறப்பு ரயிலின் ஜன்னல் முழுவதும் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு அழைக்கிறோம் என்று வசனங்களுடன் புகைப்படம் ஒட்டப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர்கள் எங்கிருந்து வேண்கள் மூலம் தனியா விடுதியில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் அதிமுக எழுச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உள்ளதாக அதிமுக தொண்டர்கள் உற்சாகமுடன் தெரிவித்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ