குலைநடுங்க வைத்த சவர்மா : உயிருக்கு போராடும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்!

Author: Udayachandran RadhaKrishnan
14 அக்டோபர் 2024, 2:41 மணி
Shawarma
Quick Share

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று சவர்மா சாப்பிட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை : கீழ நான்காம் வீதியில் சவர்மா கடையில் சவர்மா மற்றும் சிக்கன் ரோல் ஆகிய உணவுகளை நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் சாப்பிட்டுள்ளனர்.

அவர்கள் அங்கு சவர்மா மற்றும் சிக்கன் ரோல் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 5 நபர்களுக்கும் இன்று அதிகாலை வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பிரவீன் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று ஆய்வு நடத்தினர்

ஆய்வில் கெட்டுப்போன சிக்கன் மற்றும் மாமிசங்கள் இருப்பது தெரியவந்தது. அதனை எடுத்து வந்து பினாயில் ஊற்றி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அழித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரிடம் விசாரணை செய்து அந்த கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பிரவீன் குமார் புதுக்கோட்டை மாவட்டத்தில் சவர்மா விற்பனைக்கு இரண்டு வருடமாக தடை விதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

பண்டிகை காலங்களில் இனிப்புகள் தயாரிப்பவர்கள் அதிக கலர் போடக்கூடாது ரசாயனம் பயன்படுத்தக் கூடாது என்பது போன்ற அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இரவு நேர உணவுக் கடைகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருவதாகவும் தொடர்ந்து உணவகங்களில் இந்த ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்

  • CM Stalin பங்கம் செய்யும் பாஜக…பாராட்டும் ஆளுநர்…தமிழக அரசியலில் என்ன நடக்குது?
  • Views: - 104

    0

    0

    மறுமொழி இடவும்