கல்வி கற்க வந்தார்களா? கல் உடைக்க வந்தார்களா? கட்டடப் பணியில் SPORTS QUOTA மாணவர்கள்…வற்புறுத்தும் அதிகாரிகளின் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2022, 11:45 am

தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு கழகத்தின் சார்பில் விழுப்புரத்தில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கில் தங்கி விளையாட்டு பயிற்சி மற்றும் கல்வி கற்கும் மாணவர்களை வெள்ளை அடிக்கவும், கட்டிட பணிக்கு வேலை செய்யவும் அதிகாரிகள் வற்புறுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கி விளையாட்டு பயிற்சியுடன் கல்வி கற்பதற்கு ஏதுவாக மாவட்டம்தோறும் விளையாட்டு அரங்கம் மற்றும் விடுதி அமைத்து மாணவர்களை தங்கவைத்து அவர்களுக்கு விருப்பமான விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் விழுப்புரத்தில் கூடைப்பந்து, ஓட்டப்பந்தயம், கபடி போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கும் அரங்கம் உள்ளது. இங்கு தங்கி படிக்கும் மாணவர்களை மாவட்ட விளையாட்டு அதிகாரி வேல்முருகன் அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளை கொண்டு விளையாட்டு அரங்கிற்கு வெள்ளை அடிக்கவும், விளையாட்டு அரங்கில் நடைபெறும் கட்டிடப் பணிகளுக்கு இந்த மாணவர்களை ஈடுபடுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது மாணவர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. விளையாட்டு பயிற்சியில் பெரிய முன்னேற்றம் ஏற்படாத விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்காமல் இப்படி கட்டுமானப் பணிகளுக்கும் வெள்ளையடிக்கும் பணிகளுக்கும் பயன்படுத்துவது மாணவர்களை ஊக்கப்படுத்தல் விளையாட்டு ஆர்வம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 1088

    0

    0