கள்ள சாராய விவகாரம், ஊழல் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து நெல்லையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
அதிமுகவின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. குறிப்பாக ஊழல் முறைகேடு, கள்ளச்சாராய விவகாரம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து நெல்லையில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அந்த வகையில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை சித்தரிக்கும் வகையில் சிறிய கேனில் கள்ளச்சாராயம் இருப்பது போன்றும், அதைக் குடித்து ஒருவர் உயிரிழந்திருப்பது போன்று சித்தரித்து ஒப்பாரி வைத்தும் நூதனமாக தங்கள் எதிர்வினையை பதிவு செய்தனர்.
தொடர்ந்து ஊழல் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து கண்டன குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு ஐஎஸ் இன்பத்துரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.