குளியலறையில் SPY PEN கேமரா.. பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து ரசித்த கொடூரன் : சினிமாவை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2024, 10:25 am

குளியலறையில் SPY PEN கேமரா.. பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து ரசித்த கொடூரன் : சினிமாவை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்!

சினிமாவில் வரும் காட்சிகள் சிலர் வாழ்க்கையில் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். பல சம்பவங்கள் எடுத்துக்காட்டுகளாக இருந்தாலும், திருட்டுபயலே 2 படத்தில், SPY PEN கேமராவை வைத்து அமலாபாலை படம் பிடித்திருப்பார் பிரசன்னா. அதே போல ஒரு சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.

சென்னை ராயபுரத்தில் தனது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பெண்ணை Spy pen உளவு கருவி மூலம் ஆபாசமாகப் படம் எடுத்து வந்த முதுநிலை பல் மருத்துவ மாணவர் (MDS) 36 வயதாகும் இப்ராஹிம் (36) கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக அப்பெண் சந்தேகம் அடைந்து, குளியலறை அருகே இருந்த பேனாவை எடுத்து தனது கணவரிடம் காண்பித்தபோது அது உளவு பார்க்கும் கருவி என்பதை அறிந்து திடுக்கிட்டார்.

இது பற்றி அந்த பெண் அளித்த புகாரின் போலீசார் விசாரணை நடத்தி முதுநிலை பல் மருத்துவ மாணவர் இப்ராஹிமை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  • Allu Arjun bouncer arrested அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
  • Views: - 374

    0

    0