குரங்கால் மின் தடையா? நாடே இருளில் மூழ்கியதால் அதிர்ச்சி.. எதிர்கட்சிகள் கடும் கண்டனம்!

Author: Hariharasudhan
10 February 2025, 9:55 am

இலங்கையில் குரங்கு செய்த சேட்டையால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக அந்நாட்டு அமைச்சர் கூறியதற்கு எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.

கொழும்பு: இலங்கையில் நாடு தழுவிய வகையில் நேற்று (பிப்.09) காலை 11.30 மணியளவில் திடீர் மின் தடை ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்நாட்டு பெரும் அவதியுற்றனர். இதற்கு, இலங்கை தலைநகரான கொழும்பில் உள்ள தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாகவே இந்த மின் தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சாரத் துறை அறிவித்தது.

இருப்பினும், பாணந்துறை மின் இணைப்பு, துணை மின்நிலையத்தில் குரங்குகள் மோதியதால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மின் விநியோகத்தில் பெரும் தடங்கலை ஏற்படுத்தியதாகவும், இதனால் நாட்டில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சகம் பின்னர் இந்த நிலைமையை ‘பாணந்துறை துணை மின்நிலையத்தில் அவசரநிலை’ என்று அறிவித்தது. இருப்பினும், அமைச்சரின் கூற்றை இது உறுதிப்படுத்தவில்லை. எனவே, மின் நிலைமையை சரி செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

Monkey

இதனால் மிக விரைவில் மின் விநியோகத்தை மீண்டும் வழங்க பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்தது. இதனையடுத்து, சுமார் இரண்டரை மணி நேரத்தில், நாட்டின் சில முக்கிய இடங்களில் மட்டும் மின்சாரம் வந்தது.

இதையும் படிங்க: ‘டிஸாஸ்டர் மாடல்’.. வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகள்!

இதன்படி, மாலை 3 – 4 மணிக்கிடையில் நாடு முழுவதும் மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதனிடையே, பாணந்துரை மின் நிலையத்துக்குள் குரங்குகள் நுழைந்ததால், இவ்வாறு நாடு முழுமைக்கும் மின் தடை ஏற்பட்டதாக மின் சக்தி அமைச்சகம் தெரிவித்தது. இதனை, அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.

முன்னதாக, கொழும்பு புறநகர் பகுதியான பாணாந்துறை மின் விநியோக நிலையத்தில் ஏற்பட்ட மின்னழுத்த பிரச்னையால், நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும் என்றும், மின் தடைக்கு பாணாந்துறை தேசிய மின் விநியோக நிலையத்தில் புகுந்து குரங்கு செய்த சேட்டையே காரணம் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் குமர ஜெயக்கொடி தெரிவித்திருந்தார்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…