தனி தீவு போல் மாறிய ஸ்ரீவைகுண்டம்… மக்கள் வெளியேற உத்தரவு : மீட்பு பணிகளில் களமிறங்கிய ஹெலிகாப்டர்!
Author: Udayachandran RadhaKrishnan18 December 2023, 4:41 pm
தனி தீவு போல் மாறிய ஸ்ரீவைகுண்டம்… மக்கள் வெளியேற உத்தரவு : மீட்பு பணிகளில் களமிறங்கிய ஹெலிகாப்டர்!
தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணிஆற்றை ஒட்டியுள்ள கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன,. செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள பல கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் உடனடியாக அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக உணவு, குடிநீர் இன்றி மக்கள் தவித்து வருவதால் ஹெலிகாட்பர் மூலம் உணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தனித்தீவு போல ஸ்ரீவைகுண்டம் காட்சியளிப்பதால் மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
0
0