அப்பு பிரியாணி கடையை தொடர்ந்து SS ஹைதராபாத் பிரியாணி கடைக்கும் ஆப்பு.. சீல் வைத்த அதிகாரிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2024, 11:53 am

தமிழகத்தில் தொடர்ச்சியாக பிரியாணி கடைகளில் தரமற்ற பிரியாணி, கெட்ப்போன இறைச்சி என அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகின்றன.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று நேரடியாகவே ஆய்வுகளை மேற்கொண்டு புகார்கள் உண்மையானால், நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையில் மிகவும் பாப்புலரான அப்பு கடை பிரியாணி தரமற்றதாக உள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று சென்னையின் பிரபல அசைவ ஓட்டல்களில் ஒன்றான எஸ்எஸ் பிரியாணி ஓட்டலும் இந்த பிரச்சனையில் சிக்கியுள்ளது.

SS ஹைதராபாத் பிரியாணிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதனால், வார இறுதி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பிரியாணி உள்பட அசைவ உணவுகள் வாங்க கூட்டம் அலைமோதும்.

ஆனால் எஸ்எஸ் பிரியாணியின் கொடுங்கையூர் கிளையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் பொதுமக்களுக்கு தெரிய வந்ததும் பூதாகரமாக வெடித்துள்ளது.

மேலும் படிக்க: மூச்சுவிடக் கூட நேரமில்லை… பணிச்சுமையால் இளம்பெண் மரணம் : தாய் பரபரப்பு புகார்!

பொதுமக்கள் கொடுத்த புகாரின்படி, அங்கு வந்த காவல்துறையினர், இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததுடன், பொதுமக்களை யும் அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த கடையில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணி சாப்பிட்ட 34 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதும், அவர்கள் உடடினயாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதைத்தொடர்ந்து, கொடுங்கையூர் எஸ்எஸ் ஐதராபாத் பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’வைத்தனர்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!