அந்தோணியார் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு… திமிரும் காளைகள்… அடக்கும் காளையர்கள்…!!

Author: Babu Lakshmanan
22 January 2024, 10:12 am

திண்டுக்கல் ; 100 ஆண்டுகள் பழமையான புனித பெரிய அந்தோனியார் திருத்தல திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்து உள்ள உலகம்பட்டியில் 100 ஆண்டுகள் பழமையான புனித அந்தோணியார் கோவில் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 750 காளைகள் மற்றும் 430 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். இதனை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிலும், பொங்கல் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்களின் தேவாலயங்களிலும் நடத்தப்படும். திருவிழாவையொட்டியும் பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல நூறு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு அருகே உள்ள உலகம்பட்டியில் அமைந்துள்ள நூறு ஆண்டுகள் பழமையான புனித பெரிய அந்தோனியார் திருத்தல திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும், 430 மாடு பிடிவீர்களும் பங்கேற்றுள்ளனர். மதுரை, திருச்சி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட சுற்றும் பகுதிகளில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொள்கின்றன.

முன்னதாக, மாடுபிடி வீரர்களுக்கு 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உடல் பரிசோதனை செய்யப்பட்டு வாடிவாசலுக்கு அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், காளைகளை 27 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் காளைகளை முழுமையாக பரிசோதித்தனர். சீறி வரும் காளைகளை அடக்கும் வீரர்கள் 25 பேர் கொண்ட குழுவாக பிரித்து மொத்தம் 18 குழுக்களாக பிரிந்து போட்டியில் வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

கிராம மக்கள் ஒன்று கூடி நடத்தும் இந்த போட்டியில் எவரது பிடியிலும் சிக்காமல் செல்லும் காளைகளுக்கும், காளைகளின் திமிலை பிடித்து அடக்கும் வீரர்களுக்கும் கட்டில், அண்டா, டிவி, கடிகாரம், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். கோட்டாட்சியர் கமலக்கண்ணன் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியினை துவக்கி வைத்தார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!