நீங்க விசிக கட்சி.. திமுக மாதிரி பேசாதீங்க.. மதவாதத்தை கைவிட்டு மக்களுக்காக பாடுபடுங்க : திருவமாவளவனுக்கு டிடிவி அட்வைஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2022, 1:47 pm

சென்னை: பழனிச்சாமிக்கும் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. இருவருமே ஆணவத்தில் உச்சத்தில் இருக்கிறார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

2024 லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஜெயலலிதா மரணத்தில் திமுக அரசியல் செய்தால் அதை மக்கள் பார்த்துக்கொள்ளப்போகிறார்கள். சும்மா விட்டு விடுவார்களா? என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் திமுக அரசியல் செய்ய நினைக்கிறது. ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை வெளியிட்டு திமுகதான் அசிங்கப்பட்டது. ரகுபதி பேசி மாட்டிக்கொண்டார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை வைத்து திமுக அரசியல் செய்தால் அவர் மாட்டிக்கொள்வார்கள்.

டிடிவி தினகரன்

Dinakaran_UpdateNews360

நாடாளுமன்ற தேர்தலில் மெக கூட்டணி அமைக்கப்போவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டிடிவி தினகரனோ எதற்கு பழனிச்சாமிக்கு பதில் சொல்லிக்கொண்டு பார்த்துக்கொள்வோம் என்று தெரிவித்தார். நம்ம போய் இன்னொரு கட்சி பற்றியெல்லாம் ஏன் கருத்து சொல்ல வேண்டும் என்றும் கேட்டார்.

தொல். திருமாவளவன்

சமூக நீதிக்கு ஆபத்து வந்திருப்பதாக திருமாவளவன் கூறி வருவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்க பதிலளித்த டிடிவி தினகரன், திமுக உடன் சேர்ந்து திருமாவளவனும் அவர்கள் போலவே பேச ஆரம்பித்து விட்டதாக கூறினார். ஒரு மதத்தை எதிர்த்து பேசுவதும்.. ஒரு மதத்தை தாக்கி பேசுவதும் மதவாதம்தான். சிறுபான்மை சமூகத்திற்கு ஆதரவாக இருப்பது வேறு.. இந்து மதத்திற்கு எதிராக இருப்பதும் தேவையில்லாத விசயம்தானே. மதவாதத்தை திருமாவளவன் கை விட்டு விட்டு வாக்களித்த தமிழக மக்களுக்கு தேவையானவற்றை மத்திய அரசிடம் கேட்டு பெற வேண்டும். இல்லாவிட்டால் 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்.

thirumavalavan - updatenews360

ஆளுநர் பதவி

ஆளுநர் பதவி என்பது ஆட்டுக்கு தாடி போல.. அது தமிழகத்திற்கு அவசியமில்லை என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார். அதே நேரத்தில் திமுக அரசு வரம்பு மீறி செயல்பட்டால் மூக்கணாங்கயிறு போல ஆளுநர் செயல்படுவது தவறில்லை என்றும் கூறினார். ஆளுநர் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவர் அரசாங்க அதிகாரி தானே. ஆளுநர் என்ன செய்யமுடியுமோ அதைத்தானே செய்ய முடியும் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

மக்கள் வருத்தம்

மு.க ஸ்டாலின் எதிர்கட்சித்தலைவராக இருந்த போது மிக வேகமாக செயல்பட்டார். இப்போது முதல்வரான பின்னர் அவரது நடவடிக்கைகளை மக்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தமிழக மக்கள் அனைவரும் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கின்றனர். பழனிச்சாமியின் திருவிளையாடல்களைப் பார்த்து கோபப்பட்டு ஸ்டாலினுக்கு வாக்களித்தனர். இப்போது ஸ்டாலின் செய்வதைப்பார்த்து வருத்தப்படுகின்றனர். பழனிச்சாமிக்கும் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

ஆணவத்தின் உச்சம்

இருவருமே ஆணவத்தில் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் நடவடிக்கள் வேறு மாதிரியாக உள்ளது மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். லோக்சபா தேர்தலில் நாளை நமதே. நாற்பதும் நமதே என்ற முழக்கத்தை திமுக முன்னெடுத்துள்ளது. 40 தொகுதிகளிலும் திமுக ஜெயிக்க முடியுமா..பார்ப்போம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 393

    0

    0