சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமருக்கு சிலை : முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan25 June 2023, 4:14 pm
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்துவதில் உறுதியாக இருந்த புரட்சித் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர் சமூக நீதிக்காக அச்சமின்றி போராடினார், இடஒதுக்கீடு நமது உரிமை என்று உறுதியளிக்க அனைவரையும் ஊக்கப்படுத்தினார் என முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது, முன்னாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களுக்கு மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான வெளியான அறிவிப்பில் ” முன்னாள் பிரதமர், சமூக நீதிக் காவலர் பிற்படுத்தப்பட்ட மக்களின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த திரு வி.பி.சிங் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, சென்னையில் அவரது முழு உருவ கம்பிரச் சிலை அமைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 20,4-2023 அன்று சட்டமன்றப் பேரவை விதி-110 ன் கீழ் அறிவித்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.