இளம் வயது கைம்பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த நபர், அவரது மகளை மிரட்டி தொடர்ந்து, உறவு கொண்ட காமக்கொடூரன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கைலாசநாதர் மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 35) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான செல்வியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
செல்வி தன்னுடைய 3 பிள்ளைகளுடன் அரக்கோணம் பழனிப்பேட்டையில் உள்ள தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார். தன்னுடைய தாயின் மற்றொரு வீட்டில் தன்னுடைய பிள்ளைகளுடன் தனியாக குடும்பம் நடத்தி வந்தார்.
அரக்கோணம் பகுதியை சேர்ந்த காமேஷ் என்ற வாலிபருடன் செல்வி 5 வருடம் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிய காமேஷ், திருமணத்தை தவிர்த்து வந்ததால், கடந்த 3 வருடம் முன்பு அவரை விட்டு பிரிந்து, மீண்டும் காஞ்சிபுரம் கைலாசநாதர் பகுதிக்கே வந்து செல்வி குடியேறினார்.
இந்நிலையில், பேஸ்புக் மூலமாக குடியாத்தம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் அறிமுகமாகி தனக்கு திருமணம் ஆகவில்லை, நான் உங்களை திருமணம் செய்து கொண்டு நல்லபடியாக பார்த்துக் கொள்வேன் என வாக்குறுதி அளித்துள்ளார். அதன் பெயரில் செல்வி தினேஷ்குமார் உடன் சேர்ந்து வாழ சம்மதித்தார்.
அதனைத் தொடர்ந்து, செல்வியும் மூன்று பிள்ளைகளும் தினேஷ்குமாருடன் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர்.
செல்வியின் மூன்று பிள்ளைகளும் தினேஷ்குமாரை அப்பா என அழைத்து வந்தனர். கடந்த மூன்று வருட காலமாக தினேஷ் குமார் குடும்பத்தை நன்றாக கவனித்து வந்துள்ளார். தினேஷ்குமார் செல்வியின் தாம்பத்திய உறவும் நல்லபடியாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், வேறு வீடு பார்ப்பதற்காக செல்வி சென்று இருந்த சமயம், தினேஷ் குமார் மகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று மகளை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். வரும்போதே பிரியாணி வாங்கி வந்து மகளுக்கு அளித்து, ‘நீ நன்றாக சாப்பிடு,’ எனக் கூறியுள்ளார். மகள் சாப்பிட்டு முடித்தவுடன் தந்தை ஸ்தானத்தில் இருந்த தினேஷ்குமார் மகளை கட்டாயப்படுத்தி சிறுமி என்றும் பாராமல் 23.08.2023 மதியம் உடலுறவு கொண்டுள்ளார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னையும், அம்மாவையும் கொன்று விடுவேன் என கூறி பயமுறுத்தி உள்ளார்.
பின்னர், ஏதும் நடக்காதது போல் மகளை அழைத்து சென்று பள்ளியில் விட்டு விட்டு வந்து விட்டார். இதே போல், எப்போதெல்லாம் செல்வி வீட்டில் இல்லையோ அப்போதெல்லாம் மகளை வலுக்கட்டாயப்படுத்தி தொடர்ந்து உடலுறவு செய்து வந்துள்ளார்.
அதேபோல், நேற்றைய முன் தினம் செல்வி சென்னைக்கு சென்று இருந்த சமயம், மகளை வலுக்கட்டாயப்படுத்தி சிறுமி என்றும் பாராமல் மகள்என்ற உறவையும் புறந்தள்ளிவிட்டு, மகளிடம் மீண்டும் மீண்டும் உடலுறவு கொண்டுள்ளார்.
மாலை நேரத்தில் செல்வி வீட்டுக்கு திரும்பி வந்த போது மகள் தனியாக அழுது கொண்டிருந்ததை கண்டு, என்ன ஏது என விசாரித்த போது, தினேஷ் குமார் தன்னிடம் வலுக்கட்டாயப்படுத்தி தொடர்ந்து உடலுறவு கொண்டு வருவதை சொல்லி அழுதுள்ளார்.
எப்போதெல்லாம் வீட்டில் தாய் இல்லையோ, அப்போதெல்லாம் வீட்டில் இருக்கவே எனக்கு பயமாக உள்ளது எனக் கூறி தேம்பியதைக் கண்டு அதிர்ச்சி உற்ற செல்வி, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
செல்வியின் புகாரை பெற்றுக் கொண்ட காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் விசாரணை செய்ததில், சிறுமி சொன்னது அனைத்தும் உண்மை என கண்டறிந்த பின்னர், தினேஷ் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இளம் விதவையான செல்வியை திருமணம் செய்வதாக கூறி மூன்று வருட காலமாக தாம்பத்திய உறவு தொடர்ந்து செய்து வந்த காமக்கொடூரன் தினேஷ்குமார், அப்பா என்று அழைத்த மகளை கூட சிறுமி என்றும் பாராமல் வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு கொண்டது இந்த சமூகத்தின் கேடு எனவே நினைக்கத் தோன்றுகின்றது.
தன்னுடைய காம இச்சைக்கு தாயையும், மகளையும் ஒருசேர பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கையை நாசப்படுத்திய காமக்கொடூரன் தினேஷ் குமாருக்கு போக்சோ சட்டத்தையும் தாண்டி கடும் தண்டனை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.