தேர்தலைப் புறக்கணிக்கும் காங்கேயம் : பேனர் வைத்து அரசு அதிகாரிகளின் செயலுக்குக் கண்டனம்…!

Author: kavin kumar
30 January 2022, 4:51 pm

திருப்பூர் : காங்கேயத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஈரோடு சாலையில் உள்ளது அய்யாசாமி நகர். இப்பகுதி காங்கேயம் நகராட்சியின் 12வது வார்டு ஆகும். இங்கு 1600க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.இங்கு உள்ள முதல்வீதியில் தனிநபர்களால் சாலைகள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனுகொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். மேலும் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்ததால் சாக்கடை அமைப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், சாக்கடை கட்டுவதற்கு பணிகள் துவங்கி நடைபெற்று வந்தவேளையில் கடந்த 1 மாதமாக அப்பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சாக்கடை நீர் குடியிருப்பு பகுதிகளிலேயே தேங்கி நோய் தொற்றை ஏற்படுத்துவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சாலையின் மையப்பகுதியில் மின்கம்பங்கள் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் இதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் இருந்து காற்றில் பறந்துவரும் கரி துகள்களால் ஏற்படும் சுற்றுசூழல் பிரச்சனை குறித்து பலமுறை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர், வட்டாச்சியர், நகராட்சி ஆணையாளர் என அனைத்து அரசு அதிகாரிகளிடமும் மனுகொடுத்தும் எவ்வித பயனும் இல்லை என குற்றசாட்டுகின்றனர். இதனால் கடும் அதிர்ப்த்திஅடைந்த அய்யாசாமி நகர் காலனி முதல் வீதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பேனர் வைத்துள்ளர். பேனரால் காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 2226

    0

    0