5வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை… கட்டுமான நிறுவனங்களின் பங்குகள் உயர்வு : முதலீட்டாளர்கள் ஹேப்பி!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 செப்டம்பர் 2023, 11:59 காலை
Stock - Updatenews360
Quick Share

5வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை… கட்டுமான நிறுவனங்களின் பங்குகள் உயர்வு : முதலீட்டாளர்கள் ஹேப்பி!!!

வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று 66,381 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 198.30 புள்ளிகள் உயர்ந்து 66,453.78 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 45.10 புள்ளிகள் உயர்ந்து 19,772.15 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,265 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,727 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

NTPC, coal India, Larsen, Bajaj Finserv, Tata Motors போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Apollo Hospitals, Eicher Motos, ITC, SBI LIFE Insurance, Dr Reddys Labs போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.40 புள்ளிகள் சரிந்து 65.65 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.66 புள்ளிகள் ஏற்றம் கண்டு 39.00 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.95 புள்ளிகள் சரிந்து 20.40 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 0.20 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12.20 புள்ளிகளுடன் வர்த்தமாகி வருகிறது.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 323

    0

    0