திருமண நிகழ்ச்சியில் 5 சவரன் நகை திருட்டு… காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி : அடகு வைக்கும் கடையில் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2024, 4:09 pm

கோவை சிங்காநல்லூர் அருகில் உள்ள மண்டபத்தில் நடைபெற்று திருமணத்தில் மர்ம நபர் தங்க நகையை திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள்.

கோவையில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 8″ஆம் தேதி கோவை திருச்சி சாலை சிங்காநல்லூர் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்று வந்த திருமணத்தில் மர்ம நபர் ஒருவர் 5 சவரன் நகையை திருடியதாக திருமண வீட்டார் கொடுத்த தகவலின் பேரில் கோவை சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை கைப்பற்றி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விதமாக நின்று கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் திருமண மண்டபத்தில் நகை திருட்டில் ஈடுபட்டது உறுதியானது.

மேலும் விசாரணையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்ற மணி என்பதும் கோவை பீளமேடு பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்து உள்ளது.

மேலும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அடகு வைப்பதற்க்காக வைத்து இருந்த திருடப்பட்ட 5 சவரன் தங்க நகை பறிமுதல் செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • fear was more when doing ajith project அஜித் சார் படம்,பயம்தான் அதிகமா இருந்தது- ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்…