காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு.. அலறிய பயணிகள் : சென்ட்ரல் நிலையத்தில் காத்திருந்த அதிகாரிகளுக்கு ஷாக்!!!
Author: Udayachandran RadhaKrishnan6 January 2024, 1:21 pm
காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு.. அலறிய பயணிகள் : சென்ட்ரல் நிலையத்தில் காத்திருந்த அதிகாரிகளுக்கு ஷாக்!!!
காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு.. அலறிய பயணிகள் : சென்ட்ரல் நிலையத்தில் காத்திருந்த அதிகாரிகளுக்கு ஷாக்!!!
சென்னை சென்ட்ரல் முதல் மைசூர் வரை தினசரி இயங்கு்ம காவேரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயில். நேற்று மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது.
எண்ணூரைத் தாண்டி , திருவொற்றியூர் அருகே சென்றபோது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 7 பெட்டிகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
திடீரென மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதால் ரயிலில் இருந்த பயணிகள் அலறியுள்ளனர். இந்த பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் அதிகாரிகள் உடனே ரயிலை ஆய்வு செய்தனர்.

7 ரயில் பெட்டிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.