நாம் தமிழர் கட்சி வேட்பாளரை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தம் : கோவையில் பரபரப்பு.. போக்குவரத்து நெரிசல்!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2024, 1:51 pm

நாம் தமிழர் கட்சி வேட்பாளரை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தம் : கோவையில் பரபரப்பு.. போக்குவரத்து நெரிசல்!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த வாரம் தொடங்கிய நிலையில் அரசியல் கட்சியினர் சுயேட்சைகள் என தொடர்ச்சியாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

கோவையில் இன்று அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமசந்திரன் அண்ணா சிலை அருகே உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து ஊர்வலமாக வந்து வேட்பமான தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி காளப்பட்டியில் இருந்து வாகன பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

இதற்காக நாம் தமிழர் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர்.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் காளப்பட்டி நால் ரோட்டில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் அனுமதியின்றி வாகன பேரணியாக செல்லக்கூடாது என கூறியதால் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சிறிது நேர வாக்கு வாதத்திற்கு பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. பின்னர் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்ட நிலையில் மீண்டும் நேரு நகர் பகுதியில் போலீசாரால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி வாகனம் மற்றும் உடன் வந்தவர்களின் வாகனங்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதனால் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு வாகனங்களாக அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வீடியோவில் பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் போலீசார் போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 210

    0

    0