இது சும்மா டிரெய்லர்தான்… ஒரு வாரத்தில் மீண்டும் புயல்? 19 மாவட்டங்களுக்கு அலர்ட்!
Author: Udayachandran RadhaKrishnan2 December 2024, 7:20 pm
ஃபெஞ்சல் என பெயரிடப்பட்ட புயல், நேற்று அதிகாலை மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடந்தது. பொதுவாக புயல் கரையை கடந்த பிறகு மழையின் தீவிரம் குறைவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி ஆகவில்லை. மாறாக மழை அதிகரித்தது.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, மற்றும் கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் மழை மிக அதிகமாக பதிவாகியது. கிருஷ்ணகிரியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 51 செ.மீ அளவிற்கு மழை பெய்தது. இதனால் அரூர் மற்றும் ஊத்தங்கரை போன்ற பகுதிகளில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது.
இதையும் படியுங்க: மருத்துவ மாணவியின் உயிரை பறித்த புரோட்டா : கோவையில் சோகம்!
விழுப்புரம் மாவட்டத்தில் 50 செ.மீ மழை பதிவாகியதால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலியில் வெள்ளம் பாய்ந்தது. அரசூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்து ஓடியது. இதன் விளைவாக, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அனைத்து வாகனங்களும் அரசூருக்கு முன்பே நிறுத்தப்பட்டன.
திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த வாகனங்களும் பாதியில் நிறுத்தப்பட்டு மாற்று வழிகளுக்கு மாற்றப்பட்டன. ரயில் போக்குவரத்தும் விக்கிரவாண்டியுடன் நிறுத்தப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி வந்த ரயில்கள் காட்பாடி மற்றும் அரக்கோணம் வழியாக இயக்கப்பட்டன.