பூஜை முடிந்து கோவிலை அடைத்து வீட்டுக்கு திரும்பிய பூசாரி.. வழிமறித்த காட்டெருமை : உருக்குலைந்த வால்பாறை!!
Author: Udayachandran RadhaKrishnan22 November 2023, 10:45 am
பூஜை முடிந்து கோவிலை அடைத்து வீட்டுக்கு திரும்பிய பூசாரி.. வழிமறித்த காட்டெருமை : உருக்குலைந்த வால்பாறை!!
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சிங்க்கோனா ராயன் டிவிஷனை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 65) அப்பகுதியில் கோவில் பூசரியாக இருந்து வருகிறார்.
இன்று வழக்கம் போல் அருகில் உள்ள கோவிலில் பூஜை செய்து முடித்துவிட்டு மாலை 6.45″மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.
வரும் வழியில் எதிர்பாராத விதமாக அங்கு வந்த காட்டெருமை செல்லப்பனை முட்டி உள்ளது.
இதில் செல்லப்பனுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டும் குடல் சரிந்தும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். சம்பவத்தை கேள்விப்பட்ட பொதுமக்கள் காவல்துறை வனத்துறை யினருக்கு தகவல் கொடுத்து சம்பவ இடம் சென்று செல்லபனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து முடிஸ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.