‘மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகம் தான் பொறுப்பு…தவறிழைக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை’: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி..!!

Author: Rajesh
29 March 2022, 5:37 pm

தஞ்சை: பள்ளி வாகனங்கள் இயக்குவது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பள்ளி நிர்வாகங்கள் தான் பொறுப்பு. அதிலிருந்து தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார்.

தஞ்சையில் சமூக நலத்துறை சார்பில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்தார். அனைவருக்கும் வளையல் அணிவித்து, மாலை அணிவித்து, சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வளைகாப்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைமையேற்று நடத்திவைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி அறிக்கையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலமாக சமுதாய வளைகாப்பு 300 பெண்களுக்கு தற்பொழுது நடைபெற்றது. பெண்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங் கப்பட்டது.

தமிழ்நாட்டில் பழுதடைந்த 10,030 பள்ளி கட்டிடங்கள் இடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் பெயரில் 5 ஆண்டுகளில் 18,000 வகுப்பறைகள் 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைகள் மட்டுமல்லாமல் ஆய்வுகூடம், சமையல் கூடம் கழிவறை உள்ளிட்ட அனைத்தும் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட உள்ளது.

பள்ளிப் பேருந்தை இயக்க வேண்டும் என்றால் அதற்காக தனியாக அரசாணை உள்ளது. அந்த விதிமுறையை பின்பற்றி தான் பேருந்து இயக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் வரும் மாணவர்களை உதவியாளர்கள், இரண்டு ஆசிரியர்கள் பாதுகாப்பாக இறக்கி வகுப்பறை வரை பாதுகாப்புடன் செல்வதை உறுதி செய்யவேண்டும், இதை முறையாக பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் தகுந்த ஆலோசனை வழங்கப்படும் என்றார். மாணவர்களின் ஒழுங்கீனங்களை சரி செய்ய பின்தங்கிய பகுதிகளில் இருந்து வரும் 2 இலட்சம் மாணவர்களுக்கு 1100 ஆசிரியர்கள் மூலம் கவுன்சில் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • DSP Removed From Good Bad Ugly Movie கங்குவா தோல்வியால் அஜித் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்? இணையும் பிரபலம்!
  • Views: - 1379

    0

    0