கட்டுமான மூலப் பொருட்கள் விலை ஏற்றத்தை கண்டித்து வேலை நிறுத்தம் : CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் அறிவிப்பு!!
கடந்த சில நாட்களுக்கு முன் கட்டுமான மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதற்கு பல்வேறு கட்டுநர் சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
இது குறித்து CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஆர். உதயகுமார் மற்றும் CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் செயலாளரும், KCP Infra Limited நிறுவனத் தலைவருமான K.Chandraprakash ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கோவை மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் பல்வேறு பணிகளை வேகமாக செய்து வருகிறார்கள். தற்போது ஜல்லி, எம் சாண்ட், ப்ளூ மெட்டல் ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. திட்ட பணிகளுக்கான மதிப்பீட்டுத் தொகையை விட 30 சதவீதம் கூடுதலாக மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது.
பழைய விலையில் திட்ட பணிகளை செய்தால் ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலைமை இருக்கிறது. இந்த திடீர் விலை உயர்வை schedule of rates ல் force’ majeure clause என்ற பிரிவின் கீழ் விலை திருத்தம் செய்ய வேண்டும்.
நடப்பாண்டிற்கான செட்டியூல் ஆப் ரேட் அரசு தயாரிக்கும் போது ஜல்லி, ப்ளூ மெட்டல் போன்றவற்றின் விலையை 10 சதவீதம் விலையேற்ற கட்டணம் என்ற வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும்.
தற்போது நெடுஞ்சாலை துறையினர் ஜல்லி, எம் சாண்ட் , ப்ளூ மெட்டல் விலை ஏற்றத்தை கண்டித்து ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தினரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகிறார்கள். கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டதால் தேர்தல் நேரத்தில் முக்கிய திட்ட பணிகளை முடித்து தர வேண்டி இருப்பதால் ஸ்ட்ரைக்கை தள்ளி வைத்திருந்தோம்.
கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம், குப்பை அகற்றும் பணிகள் தவிர்த்து மற்ற பணிகளை நிறுத்தி வரும் மார்ச் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜல்லி, எம் சாண்ட் போன்றவற்றின் மார்க்கெட் விலையில் செட்டியூல் ஆப் ரேட் மாற்றி உரிய விலை ஏற்றம் செய்து தர வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம், எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.