மேற்குவங்க பல்கலையில், மாணவரும், பேராசிரியையும் திருமணம் செய்வதுபோன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியையும், மாணவனும் புதுமணத் தம்பதி போல், ஒருவருக்கொருவர் பொட்டு வைத்துக் கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி கண்டனங்களைப் பெற்று வருகிறது. இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் ஹரிங்கடா பகுதியில் அமைந்துள்ளது, மௌலானா அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தில், வகுப்பறைக்குள்ளேயே முதலாம் ஆண்டு மாணவரை, பேராசிரியை ஒருவர் பல்வேறு மதச் சடங்குகளுடன் திருமணம் செய்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தக் காட்சியில், இருவரும் மாறி மாறி நெற்றியில் பொட்டு வைத்து, தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளனர். இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
இதையும் படிங்க: திருநங்கைகள் தொல்லை தாங்க முடியல… கதறும் ஆட்டோ ஓட்டுநர்கள்!
ஆனால், உளவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு ஆவணப்படம் காட்டுவதற்காகவே இவ்வாறு திருமணம் போன்ற வீடியோ எடுக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட பேராசிரியை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து விசாரணை நிறைவடையும் வரை சம்பந்தப்பட்ட பேராசிரியை விடுப்பில் இருக்க பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.