பிரபல தனியார் தோட்டக்கலைக் கல்லூரியில் மாணவி சடலமாக மீட்பு : விசாரணையில் அதிர வைத்த தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2024, 7:06 pm

பிரபல தனியார் தோட்டக்கலைக் கல்லூரியில் மாணவி சடலமாக மீட்பு : விசாரணையில் அதிர வைத்த தகவல்!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட செம்பட்டி பழனி சாலையில் இயங்கி வருகிறது தனியார் ஆர் வி எஸ் பத்மாவதி தோட்டக்கலை கல்லூரி.
இக்கல்லூரியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வேளாண் மற்றும் தோட்டக்கலை சம்பந்தமான பாடங்கள் கல்லூரி விடுதியில் தங்கியும் வெளியில் இருந்து வந்தோம் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இக்கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காளிநித்தியா என்ற 18 வயது மாணவி முதலாம் ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது சொந்த ஊருக்கு மாணவி சென்று வந்ததாக கூறப்படுகிறது ஊருக்கு சென்று வந்ததிலிருந்து மாணவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

கல்லூரி விடுதியில் தங்கி உள்ள மாணவி இன்று காலை கல்லூரி மாணவிகள் விடுதி கழிவறையில் தூக்கு மாட்டி உயிரிழந்துள்ளார். சக மாணவிகள் விடுதி கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் கண்காணிப்பாளர் செம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த செம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.விசாரணை முடிவில் மாணவி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவரும்.

கல்லூரி மாணவி தங்க விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி