தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவன் தற்கொலை : கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 March 2022, 7:22 pm

விழுப்புரம் : தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விடுதியில் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள மயிலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் சதீஷ் (வயது 23). இவர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு மேல் படிப்பான மத்திய அரசின் 3 மாத காலமான பட்டைய படிப்பான Deen dayal Upadhyay Gramin Kaushalya Yojana படிப்பை அக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மாணவர் விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார்.

ஆத்தூர் அருகே உள்ள சொந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்காக சென்றுவிட்டு நேற்று மாலை 6 மணிக்கு கல்லூரி விடுதிக்கு. திரும்பியுள்ளார். விடுதியில் தன்னுடன் தங்கி உள்ள அறை நண்பர்களுடன் சரிவர பேசவில்லை என கூறப்படுகிறது.

இன்று காலை சதீஷ் வகுப்பிற்கு செல்லாமல் அறையிலேயே தனியாக இருந்துள்ளார். வகுப்பு முடிந்து மதியம் அவரது அறைக்கு திரும்பிய நண்பர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கதவு திறந்து இருந்த நிலையில் லுங்கியால் அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனே இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கல்லூரி நிர்வாகம் மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயிலம் இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி மற்றும் போலீசார் இறந்த சதிஷின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சதீஷின் செல்போனை கைப்பற்றி அதில் ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…