3வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை.. தனியார் கல்லூரியில் அதிர்ச்சி!
Author: Udayachandran RadhaKrishnan16 October 2024, 11:33 am
தஞ்சாவூர் அருகே தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவி சிக்கியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சுப்பையா பிள்ளை தெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் அழகு மணிகண்டன்(20), இவர் சிறுகனூர் அருகே உள்ள பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் இயங்கி வரும் இன்ஜினியரிங் ஆப் டெக்னாலஜி என்ற பிரிவில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் டேட்டா சயின்ஸ் குரூப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அழகு மணிகண்டன் அவர் படிக்கும் அதே வகுப்பில் ஒரு மாணவியுடன் நெருங்கி நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. பின் காலப்போக்கில் அழகு மணிகண்டன் அந்த மாணவியை ஒருதலையாக காதலிக்க தொடங்கினார். மேலும் தன் காதலை அந்த மாணவியிடமும் தெரிவித்தார்.
அப்போது மாணவி அழகு மணிகண்டனிடம் கல்லூரி படிப்பை முடித்தவுடன் இதை பற்றி பேசி கொள்வோம் என்று கூறி சென்றுள்ளார்.
அதன்பின் மாணவி அழகு மணிகண்டனுடன் பேசாமல் விலக முயற்சிக்க செய்து ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் செல் போன் எண்ணை பிளாக் செய்துள்ளார்.
மேலும் விடுமுறை முடிந்த பின் திங்கட்கிழமை மீண்டும் கல்லூரிக்கு வந்த அழகு மணிகண்டன் அந்த மாணவியிடம் ஏன் பேச மறுக்கிறாய் செல்போன் நம்பரை பிளாக் செய்து உள்ளாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மாணவி மணிகண்டனிடம் கூறுகையில் உன்னிடம் பேச பிடிக்கவில்லை என்னை காதலிப்பதை நிறுத்திவிடு என கூறி திட்டிவிட்டார்.
இதனால் அன்று முழுவதும் மன உளைச்சலில் இருந்த அழகு மணிகண்டன் நேற்று மீண்டும் கல்லூயிக்கு வந்து அந்த மாணவியிடம் தன்னிடம் பேசும் மாறும் காதலிக்கு மாறும் கதறி அழுதுள்ளார்.
மேலும் பேசவில்லை என்றால் மாடியில் இருந்து குதித்து விடுவேன் என மிரட்டி உள்ளார். அதன்பின்னும் அந்த மாணவி பேசாமல் இருந்ததால் அழகு மணிகண்டன் கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவன் அழகு மணிகண்டன் கண்டு சக மாணவர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பவம் குறித்து சிறுவனூர் போலீசாருக்கு தகவல் அளித்தன தகவலின் அடிப்படையில் சிறுவனூர் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனை மீட்டு கொணலை கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுபவித்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் அளித்தனர். பின்னர் உடலை மீட்டு அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து சிறுவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களக்கிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.