கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் இருந்து மாணவர் சடலமாக மீட்பு : விசாரணையில் அதிர்ச்சி..!!

Author: Udayachandran RadhaKrishnan
11 July 2024, 6:59 pm

கோவை வடவள்ளி பகுதியில் மருதமலை செல்லும் சாலையில் மருதமலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது பாரதியார் பல்கலைக் கழகம் கல்லூரி. இங்கு ஆயிரக் கணக்கான மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்தக் கல்லூரியில் உடற் கல்வியியல் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சுபாஷ். இவர் கோவில்பட்டியைச் பகுதியைச் சேர்ந்தவர். இவர் அதே கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

அவருடன் அந்த துறையைச் சார்ந்த ஆறு மாணவர்கள் அவர் அறையில் தங்கி படித்து வருகின்றனர். இவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து சோர்வுடன் காணப்பட்டார். இந்நிலையில் இன்று காலை சக மாணவர்கள் கல்லூரிக்குச் சென்ற நிலையில் சுபாஷ் மட்டும் தனியாக அறையில் தங்கி இருந்து உள்ளார்.

இதை அடுத்து அவர் போர்த்தி படுக்க வைத்து இருந்த பெட்சீட்டை மின்விசிறி பொருத்தும் கம்பியில் பெட் சீட்டை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி முடிந்து பிற்பகலில் வந்த சக மானவர்கள் சுபாஷ் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினர் இது குறித்து வடவள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சுபாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 379

    0

    0