பள்ளிச் சீருடையில் குத்தாட்டம் போட்ட மாணவி : மெய்மறந்து ஆடிய அதிர்ச்சி வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2022, 2:24 pm

விழுப்புரம் : தாரைப்தப்பட்டடை முழுங்கியதை பார்த்த பள்ளி மாணவி பள்ளி சீருடையுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் மகாத்மா காந்தி சாலையில் (எம்.ஜி ரோடு) சாவு ஊர்வலத்தில் குத்தாட்டம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளிக்கு செல்லும் போது வழியில் முதியவர் சடலம் தூக்கி செல்லப்பட்டது. அப்போது சாவு ஊர்வலத்தில் தாரை தப்படை மேளம் இசைக்கப்பட்டது. இதைக் கேட்டவுடன் பள்ளி மாணவி ஊர்வலத்தில் நடனமாடினார்.

https://youtu.be/Car-8erFk5U

குத்தாட்டம் போட்ட மாணவியை பார்த்ததும் சக மக்கள் கூட துவங்கினார். பள்ளி மாணவி குத்தாட்டம் போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!