திமுக அமைச்சரின் மனைவிக்கு சொந்தமான கல்லூரியில் மாணவி தற்கொலை முயற்சி : தனிப்படை விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2022, 3:51 pm
Minister Wife College Suicide - Updatenews360
Quick Share

விழுப்புரம் : உயர்கல்வி துறை அமைச்சரின் மனைவிக்கு சொந்தமான தனியார் பொறியியல் கல்லூரியில் முதல் தளத்திலிருந்து முதலாமாண்டு கல்லூரி மாணவி குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகேயுள்ள உள்ள விக்கிரவாண்டியில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடியின் துணைவியார் விசாலாட்சி பொன்முடிக்கு சொந்தமான தனியார்  பொறியியல்  கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் விழுப்புரம் கே.கே. ரோடு மணி நகர் பகுதியை சார்ந்த ரம்யா என்ற இளங்கலை மருந்தகவியல் முதலாமாண்டு மாணவி கல்வி பயின்று வருகிறார். வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவி திடீரென கல்லூரியின் முதல் மாடியிலிருந்து மாணவி கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து கல்லூரியிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கல்லூரி மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ் பிக்கு தகவல் அளித்ததின் பேரில் கல்லூரியில் மாணவி தற்கொலை முயற்சி செய்த இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்தார்.


இச்சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கல்லூரி மாணவிக்கு காதல் இருந்ததாலும் அதனால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது அடிக்கடி மயக்கம் ஏற்படும்  என்பதால் அதனால் கீழே விழுந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மாணவி மாடியிலிருந்து கீழே விழுந்ததில் முதுகு விளா எலும்புகள் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருவகிற நிலையில் மாணவி கீழே குதித்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாணவி ரம்யா தற்கொலை முயற்சி குறித்து விசாரணை மேற்கொள்ள காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 633

    0

    0