‘ராட்சசி’ பட பாணியில் தலைமையாசிரியருக்கு ஆதரவாக குவிந்த மாணவர்கள், பெற்றோர்கள் : மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2022, 4:19 pm

திருச்சி : மண்ணச்சநல்லூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை பணி இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் சரவணவேல் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து தலைமை ஆசிரியர் பணி இடமாற்றம் செய்யபட்டதை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் சரவணவேல் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் நன்கு படிப்பில் தேறி வருகின்றனர்.

மேலும் அவர் பள்ளி நிர்வாகத்தில் அவர் நேர்மையாகவும் உரிய கண்டிப்புடன் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இதனால் எங்கள் பிள்ளைகள் படிப்பில் சிறப்பாக முன்னேறி வரும் இந்த சூழலில் தலைமை ஆசிரியரை பணி இடமாற்றம் செய்வதை ஏற்றுகொள்ள இயலாது எனவே அவரை பணி இடமாற்றம் செய்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கூறி மாணவர்களின் பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மண்ணச்சநல்லூர் – துறையூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என கூறி அமைதி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

  • Mammootty replaced in Baasha Movieரஜினியுடன் மம்முட்டி நடிக்க வேண்டிய இன்னொரு படம்.. பறிபோன வாய்ப்பு!
  • Views: - 602

    0

    0