கால்பந்து போட்டியில் தோல்வி: மாணவர்களை எட்டி உதைத்து கொடூரமாக தண்டித்த PT மாஸ்டர்: தீயாய் பரவும் வீடியோ…!!

Author: Sudha
11 August 2024, 11:38 am

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதில் பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் கொளத்தூர் அரசுப்பள்ளி மாணவர்கள் தோற்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசிரியர், அண்ணாமலை மாணவர்களை தரையில் அமர வைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டி ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்து கொடூரமாக தண்டித்தார்.

இதுதொடர்பான வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை செல்போனில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகி அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 475

    0

    0