போதைப் பொருட்களை விற்க மாணவர்களே வியாபாரியாக மாறியுள்ளது வேதனை : நடிகர் தாமு வருத்தம்!!
Author: Udayachandran RadhaKrishnan26 August 2022, 12:45 pm
போதை பொருட்களை விற்பனை செய்வதற்கு மாணவர்களே வியாபாரியாக ஆக்குவது வேதனைக்குரியது என கல்லூரி விழாவில் நடிகர் தாமு கூறியுள்ளார்.
சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் அமைந்துள்ள எஸ் ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைகழகம் ) எம்.பி.ஏ, எம்.சி.ஏ, பிகாம், பி.சி.ஏ, பி.எஸ்.சி, உள்ளிட்ட அறிவியல் & மானுடவியல் பிரிவு , ஹோட்டல் மேனஜ்மென்ட் மற்றும் துணை மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றின் 2022-23 ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.
விழாவில் எஸ்.ஆர்.எம் இராமாபுரம் வளாகத்தின் ஊடகவியல்துறை திட்ட இயக்குனரும் நடிகருமான டாக்டர் தாமு மாணவ மாணவிகளிடம் பேசியதாவது, இன்றைய சூழலில் தமிழக மட்டுமல்லாது இந்தியாவையே குறிப்பாக மாணவர் சமுதாயத்தை சீரழித்து வரும் செயலாக போதை பொருள் செயல்பட்டு வருகிறது.
இந்த போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு மாணவர்களையே வியாபாரியாக மாற்றியுள்ளது வேதனைக்குரிய செயலாக உள்ளது. இதனை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக முதல்வர் அவர்கள் காவல்துறையினரை முடிக்கி விட்டு உள்ளார் என பேசினார்.