தினமும் படியில் பயணம் செய்ய வேண்டியதா இருக்கு : கூடுதல் பேருந்து இயக்க கோரி அரசு பேருந்தை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2022, 6:42 pm

உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க கோரி அரசு பேருந்தை மாணவர்கள் சிறை பிடித்து போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது அங்கனூர் கிராமம், இந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் உளுந்தூர்பேட்டை மற்றும் அருகில் உள்ள பள்ளி கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

தினந்தோறும் காலை நேரத்தில் பேருந்துகள் உரிய நேரத்தில் இல்லாததால் பள்ளிக்கு மற்றும் கல்லூரி செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருவதாக கூறி இன்று காலை அந்த வழியாக வந்த அரசு பேருந்து சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். அரை மணி நேரத்துக்கு பிறகு அனைவரும் பேருந்தில் தொங்கியபடி பள்ளிக்கு சென்றனர். கூடுதல் அரசு பேருந்து இயக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!