பாத்ரூம் கூட போக முடியல.. அசிங்கமா பேசுறாங்க.. பெற்றோர்களுடன் மாணவர்கள் போராட்டம்..!

Author: Vignesh
19 June 2024, 12:35 pm

திருவள்ளூர் அருகே கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்து பெற்றோர்களுடன் போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். மேலும், அவதூறாக மாணவர்களை பேசுவதாக கூறி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பெண்ணாலூர் பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஜீவா தலைமை ஆசிரியர், பள்ளியில் கழிவறை உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் செய்து தராமல் பள்ளி மாணவர்களை அவதூறாக பேசுவதை கண்டித்து பள்ளி மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து பள்ளிக்கு செல்லாமல் வாயில் முன்பாக பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து அவர்களிடம் பென்னலூர் பேட்டை காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சமரசம் மேற்கொண்டும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் தங்களது பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் கல்வித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களுடன் கோரிக்கை வைத்தனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!