இந்திய வரைபடம் போல் நின்ற மாணவ, மாணவிகள்… கழுகு பார்வை காட்சி..!
Author: Vignesh15 August 2024, 12:46 pm
இந்திய வரைபடம் போல் மூவரணத்தில் தத்ரூபமாக நிற்கும் பள்ளி மாணவ மாணவிகளின் கழுகு பார்வை காட்சி.
பிரிந்து கிடந்த 17 இந்திய மாகாணங்கள் ஒருங்கிணைந்த இந்தியாவாக மாறிய வரலாற்றை தத்ரூப ஓவியமாக நாடக அணிவகுப்பு நடத்திய பள்ளி மாணவர்களின் கழுகு பார்வை காட்சி பார்ப்போரை வியப்படைய செய்தது.இந்திய நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் உள்ள மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் உள்ள கோவைப்புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்,சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஒருங்கிணைந்த இந்தியா உருவான வரலாற்றை கூறும் நாடக அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில் இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் பல்வேறு பிரேதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தைதை போல குழுவாக மாணவர்கள் பிரிந்து நின்றனர்.”பிரித்தானியாவின் இந்தியா” என வரலாற்றில் கூறப்பட்ட காலத்தில் மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு,வல்லபாய் படேல் ஆகியோர் இணைந்து
மாநிலங்களை இணைப்பது குறித்த பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து, பிரிந்து கிடந்த 17 மாநிலங்கள் இணைந்து இந்தியாவாக மாறியதை தனி தனி குழுவாக நின்ற மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக இணைந்து ஒருங்கிணைந்த இந்திய வரைபடமாக நின்றனர்.
தொடர்ந்து தேசிய கொடி வண்ணங்களை கைகளில் பிடித்தபடி நின்ற மாணவர்களின் அணிவகுப்பு தத்ரூப இந்திய வரைபடமாக காட்சியளித்தது.
0
0