கல்லூரி விடுதியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவிகள்…. ஸ்பாட்டுக்கு சென்ற போலீசார் : விசாரணையில் அதிர்ச்சி!!
Author: Udayachandran RadhaKrishnan17 ஜூன் 2022, 3:52 மணி
வேடசந்தூர் அருகே தனியார் வேளாண்மை கல்லூரியில் மாணவ மாணவிகள் திடீர் மயக்கம் அடைந்த நிலையில் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் வேளாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
மேலும் இதர மாவட்டங்களான கரூர், சேலம், கோயம்புத்தூர், கடலூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
நேற்றைய தினம் சுமார் நித்திய குமார், ஷோபனா, கோகுல் நந்தினி, சுவேதா, சங்கரி, தமிழரசி உள்ளிட்ட 13 மாணவ மாணவிகள் திடீரென மயக்கமடைந்து வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆர்டிஓ சிவக்குமார் அரசு மருத்துவமனையில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது மாணவ மாணவிகள் கூறுகையில் காலை 7 மணி அளவில் வகுப்புகள் தொடங்க படுவதாகவும் காலை உணவு ஒன்பது முப்பது மணி அளவில் கொடுக்கப்படுவதால் பசியில் மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்தனர்
மேலும் இதுகுறித்து ஆர்டிஓ விடம் கேட்டபோது இது சம்பந்தமாக வேடசந்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும், கல்லூரியில் முறையான விசாரணை நடத்தப்பட்டு ஏதேனும் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்
உணவு வழங்க தாமதமானதால் மாணவ மாணவிகள் பசியில் மயங்கி விழுந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
0
0