இதை மட்டும் செய்யாதீங்க.. ‘சூர்யா 42’-பட தயாரிப்பாளர் விடுத்த பகீர் எச்சரிக்கை..! நடந்தது என்ன..?

Author: Vignesh
26 September 2022, 5:19 pm

லீக் ஆகும் சூர்யா 42 பட போட்டோக்கள் பற்றி தயாரிப்பாளர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். சூர்யா தற்போது சிறுத்தை சிவா உடன் கூட்டணி சேர்ந்து ஒரு வரலாற்று கதையில் நடித்து வருகிறார். அந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கிறது.

ஷூட்டிங் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில தினங்களாக ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகி வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா கடும் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஒவ்வொரு காட்சியும் மொத்த குழுவினரின் ரத்தமும் வியர்வையும் சிந்தி உருவாகி கொண்டிருக்கிறியாது. இதை எல்லோருக்கும் தியேட்டரில் சிறப்பான அனுபவமாக வழங்க நினைகிறோம். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்களே நீக்கி விடுங்கள், இல்லை என்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!