‘மகாத்மா காந்தியும் மோடியும் ஒன்றுதான்’: திமுக சார்பு எம்.பி. பாரிவேந்தர் புகழாரம்…தமிழகத்தில் அடுத்தடுத்து மோடிக்கு ஆதரவளிக்கும் தலைவர்கள்..!!
Author: Rajesh21 April 2022, 5:41 pm
திருச்சி: மோடி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பாடுபடுவர் என திமுக சார்பு எம்.பி. பாரிவேந்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.
திருச்சியில் வண்ணாரப்பேட்டை பகுதியில் பார்க்கவகுல சங்கத்திற்கான அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் அலுவலகத்தை திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பார்கவ குல முன்னேற்ற சங்கம் ஓராண்டு காலமாக இயங்கி வருகிறது. இந்து சமுதாய மக்களை மதிப்பு கூடியவர்களாக மாற்றி உள்ளது. சமுதாயத்திற்கு சரியான அரசியல் பங்கு இல்லை எனவே இந்திய ஜனநாயக கட்சி துவக்கப்பட்டது.
கட்சி தொடங்கப்பட்ட உடனே தேர்தலில் போட்டியிட்டு பல ஆயிரம் வாக்குகளைப் பெற்றோம்.
சங்கம் தனியாக இயங்கி வருகிறது. சத்ய நாரயணன் தலைவராக செயல்பட்டு வருகிறார். கட்சி என் தலைமையில் இயங்குகிறது. திருச்சியில் அதிக சமுதாய மக்கள் வாழ்வதால் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தமிழகம் முதல் உத்திரபிரதேசம் வரை எந்தந்த ஜாதி கட்சியுடன் சேர்ந்து வெற்றி பெறலாம் என்று தான் கட்சிகள் செயல்படுகிறது.
விரைவில் திருச்சியில் மாநாட்டை நடத்தி எங்களது கட்சியின் வலிமையை காட்டுவோம். பெரம்பலூரில் 3 வருட காலத்தில் செய்துள்ள நலத்திட்டங்களை குறித்து புத்தகமாக வெளியிட உள்ளேன். பெரம்பலூரில் ரயில் பாதை அமைப்பதற்கு தொடர்ந்து மத்திய அரசிடன் கோரிக்கை வைத்துள்ளேன்.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஏழை எளிய 300 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வருகிறேன். இது வரை 900பேர் பயின்று வருகின்றனர்.
தொடர்ந்து பேசிய அவர், மோடி என் பங்காளி அல்ல. அண்டை வீட்டுக்காரர் அல்ல, நாடு வளர வேண்டும் என நாட்டு மீது பற்று கொண்டவர். உழைக்கும் எண்ணம் கொண்டவர். சிறுபான்மையினருக்கு எதிரானவர் என தவறாக கட்டமைப்பு தமிழகம் சிந்தனை மாறும். விரைவில் தமிழகத்தில் அவரை ஏற்று கொள்வார்கள். மேலும், தேசப்பற்று விஷயத்தில் மகாத்மா காந்தியும் மோடியும் ஒன்றுதான் என புகழாரம் சூட்டியுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் தவறில்லை. நமது விருப்பத்திற்காக கல்வி வைக்க கூடாது. போட்டி தேர்வை எதிர்கொள்ள அடிப்படை கல்வி தகுதி வளர்த்து கொள்ள வேண்டும். எந்த கொள்கையாக இருந்தாலும், மாணவர்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் பயன் படுத்த வேண்டும். நீட் தேர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏழை, கிராம மாணவர்கள் என கூற கூடாது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாநில அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம் .மாவட்ட தலைவர் அன்புதுரை, IJK மாவட்ட தலைவர் ரகுபதி, தெற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், மாநகர் மாவட்ட தலைவர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.