கோவை : கோவையில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவது, திமுக.,வின் ஹாட்பாக்ஸ் மற்றும் பணப்பட்டுவாடாவுக்கு உடந்தையாக இல்லாததால் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பிரச்சாரம் வரும் 17ம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில், பல்வேறு கட்சி வேட்பாளர்களும் வித்தியாசமான முறையில் மக்களின் கவனத்தை ஈர்த்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதன்படி, திமுக வேட்பாளர்களும் பல்வேறு விதமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்ட பொறுப்பாளராக உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூரில் இருந்து ஆட்களை வரவழைத்து இங்கு தேர்தல் பணி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், வார்டுக்கு வார்டு ஹாட்பாக்ஸ்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.
பிரச்சாரத்திற்குச் செல்லும் திமுக வேட்பாளர்கள் தங்கள் வார்டில் உள்ள மக்களுக்கு ஹாட்பாக்ஸ் மற்றும் அதனுள் பணமும் வைத்து விநியோகத்தை தொடங்கியுள்ளனர். இந்த விநியோகத்தை மேற்கொள்வது கரூரில் இருந்து இறங்கிய உடன் பிறப்புகள் என்று கட்சி வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே ஹாட்பாக்ஸ் கொடுக்கும் நபர் யார் என்பது கூட தெரியாமல் அதிமுக நிர்வாகிகள் சிலரின் வீட்டிற்கு ஹாட்பாக்ஸ் செல்ல ஆங்காங்கே பிரச்சனைகள் வெடிக்கின்றன. பிரச்சாரம் தொடங்கியது முதல் தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் பெட்டி பெட்டியாக ஹாட்பாக்ஸ்களை அதிமுகவினர் பிடித்து தேர்தல் பார்வையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். அதிகாரிகளும் அவற்றை பறிமுதல் செய்துவிடுகின்றனர்.
இப்படி பறிமுதல் செய்வதாலோ என்னவோ கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் தொடர்ந்து மாற்றப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.ஏ.எஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, கோவை மாவட்டத்துக்கான தேர்தல் கண்காணிப்பு அதிகாரியாக மரியம் பல்லவி பல்தேவ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டு இருந்தார்.
பணிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே அவர் மாற்றப்பட்டார். மேலும், கோவை மாவட்டத்திற்கு புதிய தேர்தல் கண்காணிப்பாளராக ஹர் சகாய் மீனா நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 12-ந் தேதி அவர் அவர் விடுமுறையில் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே ஹர் சகாய் மீனாவுக்கு பதிலாக பவன்குமார் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார். இவர் பணிக்கு வந்ததும் அடுத்தடுத்து திமுக.,வினர் விநியோகிக்க இருந்த பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டு வந்தன. ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை என 2 நாட்கள் மட்டுமே அவர் பணியாற்றிய நிலையில் தற்போது அவரையும் தூக்கியடித்துள்ளது திமுக அரசு.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் புதிய தேர்தல் கண்காணிப்பு அலுவலராக கோவிந்தராவ் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வாக்குப்பதிவுக்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில் பண விநியோகத்தை சில கட்சிகள் பிரச்சாரம் முடிந்தவுடன் தொடங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்படி பணம் விநியோகத்தின் போது இந்த அதிகாரியும் முறைப்பு காட்டினால் இவரும் மாற்றப்படுவது உறுதி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
This website uses cookies.