கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் கோவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவையில் சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக இன்று தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி தாமரை கண்ணன் கோவை வந்தார்.
தொடர்ந்து அவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில்
மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையாளர்கள், சிறப்பு அதிரடி படை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சுமார் 30 நிமிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பின் அவர் கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…
This website uses cookies.