இப்படியொரு கசப்பான சம்பவம் மதுரையில் நடைபெற்றதில்லை.. டாக்டர் சரவணனின் மனவேதனை வரவேற்கத்தக்கது : ஆர்பி உதயகுமார் ஆதரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2022, 4:35 pm
RB Udaya - Updatenews360
Quick Share

நிதியமைச்சர் வாகனம் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் சரவணனின் மனவேதனை வரவேற்க தக்கது- ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அரசு காலம் தாழ்த்துவது உடைந்தையாக உள்ளது போல் இருப்பதாக ஆர்.பி.உதயகுமார் பேட்டி.

மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியை தமிழக முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

ராஜஸ்தான் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பாரம்பரிய தலைப்பாகை மற்றும் பாசி மாலை அணிவித்து வரவேற்றனர்.

தொடர்ந்து விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கும் விதமாக வாலிபால் விளையாடி ஆர்.பி.உதயகுமார் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து முன்னால் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசுகையில், இளைஞர்களிடையே போதைப்பொருள் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

போதைப்பொருளை தடுக்க காவல்துறையை சுகந்திரமாக செயல்பட வைக்க வேண்டும். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய உரிய சட்டத்தை விரைவாக கொண்டு வர வேண்டும். இன்னமும் ஆன்லைன் ரம்மிக்கு குழு போடுகிற கருத்து கேட்கிற அரசாக திமுக அரசு உள்ளது.

இது நாடறிந்த சூதாட்டம் ஏற்கனவே தடை சட்டம் போடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் உரிய வாதங்களை முன்வைத்து வாதாட காரணத்தினால், வழக்கை சரியாக முன்னெடுக்கவில்லை.

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அரசு காலம் தாழ்த்துதை பார்த்தால் இந்த அரசு அதற்கு உடந்தையாக உள்ளதா என்ற அச்சமும் ஐயமும் உள்ளது.

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அமைச்சர்கள், அரசு தரப்பினர்க்கு முன்னுரிமை கொடுத்து மரியாதை செய்வது மரபு. நிதியமைச்சரின் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி பாஜக தொண்டர்களிடையே உணர்ச்சியை கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

நிதியமைச்சர் வார்த்தையை கடுஞ்சொல்லாக நினைத்து பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பண்புமிக்க கண்ணியமிக்க மதுரையில் இது போன்று இதுவரை நடைபெற்றதில்லை.

துரதிருஷ்டவசமாக இந்தசம்பவம் நடைபெற்றுள்ளது. உணர்ச்சி கொந்தளிப்பில் விரும்பத்தகாத வகையில் பாஜக தொண்டர்கள் நடந்து கொண்டது வேதனையளிக்கிறது. கசப்பான நிகழ்வு இது.

நேற்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் யாருமே விரும்பாத கசப்பான சம்பவம் நடைபெற்றது. அந்த நிகழ்வால் மனம் வேதனைப்பட்டதாக சரவணன் தெரிவித்துள்ளார்.மதுரையில் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கக்கூடாது.
மருத்துவர் சரவணன் வேதனையை வெளிப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 630

    0

    1